மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பேரூராட்சி, கிளை நூலகத்தில், 60 வது ஆண்டு விழா, நடந்தது. இதில் புத்தகக் கண்காட்சி, புரவலர்களுக்கு பட்டயம் வழங்குதல், புதிய புரவலர்கள் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றதால், முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
வாசகர் வட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் பாலாஜி பூபதி, வர்த்தகர் சங்க தலைவர் அம்மு, இள மின் பொறியாளர் வெங்கடாசலம், அரிமா சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். நூலகர் அன்பழகன் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் ரேவதி புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, தமிழக அரசின் புரவலர்களுக்கான பட்டயங்களை வழங்கினார்.
வர்த்தக சங்க கவுரவ தலைவர் சண்முகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சித்ரா, நுாலக புரவலர்கள் நடராஜன், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுாலக பணியாளர்கள் தேவி, பாஸ்கரன் செய்திருந்தனர்.
வாசகர் வட்ட பொருளாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது