சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது

1


சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் கொண்டுவரப்பட்ட 3 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துறைமுகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, ரூ.18.2 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், பொம்மைகள், சீன பட்டாசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு காரணம் என்ன? பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement