தேசிய மூத்தோர் தடகளப் போட்டி ஸ்ரீவில்லிபுத்துார் எஸ்.ஐ. சாதனை

ஸ்ரீவில்லிபுத்துார்:கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள போட்டியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி 55, சிவகாசி தாலுகா ஈஞ்சார் நடுவப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார்.

இவர் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள 5ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்று 30.27 நிமிடங்களில் நடந்து முதலிடம் பெற்றார். உயர் அதிகாரிகள், நண்பர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement