ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து கொத்தகுப்பம் வழியாக பொதட்டூர்பேட்டை செல்லும் மார்க்கத்தில், இக்கிராமம் அமைந்துள்ளது.
சோளிங்கரில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் பேருந்துகள், கோணசமுத்திரம் பேருந்துநிறுத்தத்தில் நின்றுசெல்கின்றன. அரசு பேருந்து தடம் எண்: டி27, பல ஆண்டுகளாக கோணசமுத்திரத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோணசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பாழடைந்து கிடந்த ரேஷன் கடை கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அதே பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக, அருகே உள்ள நிழற்குடை இரும்பு தகடுகளால் மூடப்பட்டுள்ளது.
இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணிக்கான பொருட்களை வேறு இடத்தில் வைக்கவும், நிழற்குடையை பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது