சமத்துவபுரம் சிறுவர் பூங்கா மேம்படுத்த எதிர்பார்ப்பு

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சந்தானவேணுகோபாலபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது சமத்துவபுரம் குடியிருப்பு. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சமத்துவபுரத்தின் நடுவே சிறுவர் பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை. மேலும், செடி, கொடிகளும் வளர்க்கப்படுவது இல்லை.பூங்காவின் கம்பி வேலியும்சேதமடைந்து, அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது.

எனவே, சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து, உயரமான வலைகளை அமைக்கசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement