ஆதிதிராவிட நல விடுதி வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து வீண்

திருவாலங்காடு,திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 850க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்குவதற்காக, மணவூர் சாலையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 10 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விடுதி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், விடுதி நிர்வாகம் தற்போது வரை செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, ஆதிதிராவிட நல விடுதி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement