பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பரமக்குடி அருகே விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் 35. திருமணமாகவில்லை. கான்ட்ராக்ட் தொழில் செய்கிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னை கொலை வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்துள்ளார்.
நேற்று இரவு 9:00 மணியளவில் பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த சிலர், உத்திரகுமாரை தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் நிலை தடுமாறி விழுந்த உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமக்குடி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் விசாரணையில் முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது தெரியவந்தது. கொலையில் ஈடுபட்ட ஹெல்மெட் அணிந்த மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., சந்தீஷ் நேரில் விசாரணை நடத்தினார்.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது