வரும் 9ல் முத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

கடம்பத்துார், கடம்பத்துார் திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவிலில், வரும் 9ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.

வரும் 9ம் தேதி காலை 8:00 - 8:30 மணிக்குள் கும்பாபிஷேகமும், காலை 11:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

Advertisement