பாலத்தில் மணல் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில், சாலையோரம் மணல் குவிந்திருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம், மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேம்பாலத்தில் துப்புரவு பணிகள் மேற்கொண்டு பல மாதங்கள் ஆகின்றன.இதனால், மேம்பால சாலையோரம் மணல் குவிந்து கிடக்கிறது.இதனால், வாகன ஓட்டி கள்விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது.

குறிப்பாக, இருசக்கரவாகன ஓட்டிகள்கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில்,மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement