இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.360 குறைந்து ரூ.320 அதிகரிப்பு!

1


சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 06) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, பின்னர் சில மணி நேரங்களில் ரூ.320 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.64 480க்கு விற்பனை ஆகிறது.





தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 04), 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 8,010 ரூபாய்க்கும், சவரன், 64,080 ரூபாய்க்கும் விற்பனையானது.


நேற்று (மார்ச் 05), தங்கம் விலை கிராமுக்கு, 55 ரூபாய் உயர்ந்து, 8,065 ரூபாய்க்கு விற்பனையானது.


சவரனுக்கு, 440 ரூபாய் அதிகரித்து, 64,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய்; சவரனுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்து இருந்தது.


இந்நிலையில் இன்று (மார்ச் 06) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. பின்னர் சில மணி நேரங்களில் ரூ.320 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.64 480க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement