வைகையில் படுகை அணை

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் நீளமான படுகை அணையை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

படுகை அணை 200 முதல் 250 மீட்டர் வரை நீளம் கொண்டதாக கட்டப்படும், முதன் முறையாக கானூர், பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக 410 மீட்டர் நீளத்தில் படுகை அணை கட்டப்படுகிறது. படுகை அணையில் வலது புறம் பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக இரண்டு ஷட்டர்களும், இடது புறம் கானூர் கண்மாய் பாசனத்திற்காக நான்கு ஷட்டர்களும் அமைக்கப்படுகின்றன.

கானூர் கண்மாய் மூலம் மூவாயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களும், பழையனூர் கண்மாய் மூலம் ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும் தடுப்பணை மூலம் பழையனூர், கானூர் கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேரும். படுகை அணை கட்டுமான பணியை கலெக்டர் ஆஷா அஜித் நேற்று ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் ரமேஷ் படுகை அணை பணிகள் குறித்து விளக்கமளித்தார். கோட்ட செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் சுரேஷ், தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement