பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா; ஏ.ஐ.டி.யு.சி., தீர்மானம்

புதுச்சேரி: பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தியுள்ளது.

ஏ.ஐ.டி.யு.சி., மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன்தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.

கவுரவத்தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி, மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், மோதிலால், சிவகுருநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் போராட்டத்தின் காரணமாக அரசு நல வாரியமாக அமைக்கப்படும் என அறிவிப்பு செய்து, இதுவரை செயல்படுத்தவில்லை.

எனவே நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement