சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி

காரைக்குடி: காரைக்குடி சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தவக்காலம் தொடங்கியது.
குருத்தோலை ஞாயிறு அன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட சிலுவை அடையாள குருத்து ஓலையை எரித்து அதை சாம்பல் செய்து திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள் அதனை அர்ச்சித்து அனைவரது நெற்றியிலும் சாம்பலால் சிலுவை அடையாளம் இடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி வரை நோன்பு இருந்து முக்கிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருவர். காரைக்குடி செக்சாலை துாய சகாய மாதா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதிரியார் சார்லஸ் திருப்பலி நிறைவேற்றி சாம்பல் பூசி ஆசி வழங்கினர். செஞ்சை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் பாதிரியார் கிளமென்ட் ராசா, சிவகங்கை மறைமாவட்ட பணியாளர் ஜான் மெல்க்கீஸ் சாம்பல் பூசி ஆசி வழங்கினர்.
* திருப்புத்துார் ஆர்.சி.புனித அமல அன்னை சர்ச்சில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நடந்தது. பாதிரியார் அற்புதஅரசு தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை, வழிபாட்டு முறை, நற்செய்திகளை போதித்தார். ஏப்.13ல் குருத்தோலை ஞாயிறும், ஏப்.18 ல் பெரிய வெள்ளியும், ஏப். 20 ல் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படும்.
மேலும்
-
ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; தமிழிசைக்கு போலீசார் அனுமதி