ஜூலை 3ல் அமர்நாத் யாத்திரை

ஜம்மு: ஜம்மு - -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமர்நாத்தில், 12,756 அடி உயரத்தில் உள்ள குகை கோவிலில், பனியால் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடர்பாக, அமர்நாத் கோவில் வாரிய கூட்டம், அதன் தலைவரும், ஜம்மு - -காஷ்மீர் கவர்னருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடந்தது.
இதுகுறித்து, கவர்னர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ல் துவங்குகிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தின் பால்டால் ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் யாத்திரை துவங்கும். 39 நாட்கள் இந்த யாத்திரை நீடித்து, ஆக., 9 ரக் ஷா பந்தன் நாளில் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
Subramanian - ,
06 மார்,2025 - 07:02 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; தமிழிசைக்கு போலீசார் அனுமதி
Advertisement
Advertisement