கல்லுாரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெவ்வேறு பகுதிகளில், கல்லுாரி மாணவி உட்பட, 3 பெண்கள் மாயமாகினர்.
தளி அடுத்த குடிசாமனப்பள்ளியை சேர்ந்தவர் சஞ்சனா, 19. நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் தளி போலீசில் அளித்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், 24, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர், எழில்நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதம்மாள், 37. கடந்த, பிப்., 7ல், வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர், ஓசூர் சிப்காட் போலீசில் அளித்த புகாரில், தண்டபாணி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராயக்கோட்டை அடுத்த முகளூரை சேர்ந்தவர் அனுபிரியா, 20. ராசிபுரத்தில் தங்கி, அங்குள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு பி.பி.ஏ., படிக்கிறார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவர் கடந்த, 2ல், கல்லுாரி செல்ல ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் ராயக்கோட்டை போலீசில் அளித்த புகாரில், கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகொள்புதுாரை சேர்ந்த ராஜ்குமார், 26, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
******************