பொது விநியோக திட்டத்தில் நாளை குறைகேட்பு முகாம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம், நாளை (8ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், நாளை காலை, குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
இம்முகாம்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகார சான்று கோருதல் குறித்த மனுக்களும் பெறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement