அறுபடை வீடு ஆன்மிக பயணம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து 101 பக்தர்கள், அறுபடை வீடு ஆன்மிக பயணம் புறப்பட்டனர்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், விழுப்புரம், கடலுார் மண்டலத்தைச் சேர்ந்த 101 பக்தர்கள் அடங்கிய குழுவினர் ஆன்மிக பயணத்தை துவக்கினர்.

விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்ட பயணத்தை, மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், துவக்கி வைத்தார். அலுவலக மேலாளர் கண்ணன் வரவேற்றார். இக்குழுவினர் திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, பழமுதிர்சோலை, சுவாமி மலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

உதவி ஆணையர்கள் ரமேஷ், சக்திவேல், ஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குமார், செயல் அலுவலர் வேலரசு, சரக ஆய்வாளர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement