டிரான்ஸ்பார்மர் பழுது கிராம மக்கள் அவதி

அவலுார்பேட்டை : பொற்குணம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேல்மலையனுார் அடுத்த பொற்குணம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன், எஸ்.எஸ்., 3 டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. இதையடுத்து, தேவனுார் மின் நிலையத்திலிருந்து டிரான்ஸ்பார்மரை பழுது நீக்க எடுத்து செல்லப்பட்டது.

இங்கிருந்த கம்பத்திலிருந்தே கிராமத்திற்கு தற்காலிக ஏற்பாடாக மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து குறைந்த மின்சப்ளை வருவதால், விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, டிரான்ஸ்பார்மரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement