20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
கிருஷ்ணகிரி,:முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மார்ச், 1ல் பிறந்த, 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம் மற்றும் நகர, தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம் (கிருஷ்ணகிரி மேற்கு), வேலுமணி (கிருஷ்ணகிரி கிழக்கு) ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் பழங்கள், சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.