உலக பொறியியல் தின  கருத்தரங்கம் 

புதுச்சேரி : இந்திய பொறியாளர் நிறுவனத்தின், புதுச்சேரி மாநில மையம் சார்பில் உலக பொறியியல் தின விழாவையொட்டி 'வளம் குன்றா வளமை' தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.

புதுச்சேரி, பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கத்திற்கு, நிறுவன செயலர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். இந்திய பொறியாளர் நிறுவன புதுச்சேரி மாநில மையம் தலைவர் சீனு திருஞானம் நோக்கவுரை ஆற்றினார்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் கலந்து கொண்டு, வெப்பமயமாதல் குறித்து பேசினார்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீர செல்வம், முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், செயற்பொறியாளர் உமாபதி ஆகியோர் 'வளம் குன்றா வளமை' என்ற தலைப்பில் பேசினர்.

பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள், இந்திய பொறியாளர் நிறுவனத்தின் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொறியாளர் உமாபதி நன்றி கூறினார்.

Advertisement