விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

காரைக்கால்,: காரைக்காலில் சாலை விபத்தில் இறந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு சுப்ராயபுரம் சுபிக்க்ஷா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 36; இவர் சிறப்பு போலீஸ் ஏட்டாக, நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5ம் தேதி தனது பைக்கில் பிடாரி கோவில் தெரு வளைவில் வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழுந்து அங்குள்ள வீட்டின் சுற்றுசுவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அசோக்குமார் இறந்தார்.

அவரது ஈமச்சடங்குக்கு தேவையான உதவியை உடனே வழங்க எஸ்.பி., சுப்ரமணியன் உத்தரவிட்டார். அவரது உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் 12 போலீசார், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement