தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ரதவீதிசாலையை சீரமைக்க கோரிக்கை


தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ரதவீதிசாலையை சீரமைக்க கோரிக்கை


அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மாசிமக தேரோட்ட விழா, வரும், 18ல் நடக்கவுள்ளது. விழாவிற்கு, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் தேரோட்டம் நடக்கும் கோவில் ரதவீதி சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே, தேரோட்டத்திற்கு முன்பாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement