நாமக்கல்லில் பைக் மோதிகட்டட தொழிலாளி பலி



நாமக்கல்:நாமக்கல், சந்தைபேட்டை புதுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 67, கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, இ.பி.,காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த பைக், ஸ்கூட்டர் மீது
மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேந்திரன் நேற்று இறந்தார்.ராஜேந்திரனின் மகள் சத்யா அளித்த புகார்படி, நாமக்கல் போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement