புதிய தார்சாலை அமைப்புமகிழ்ச்சியில் கிராம மக்கள்
புதிய தார்சாலை அமைப்புமகிழ்ச்சியில் கிராம மக்கள்
மல்லசமுத்திரம்:பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்ட மானுவங்காட்டுபாளையம்- ஊத்துப் பாளையம் சாலை சரி செய்யப்பட்டு, புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மல்லசமுத்திரம் அருகே, மானுவங்காட்டுபாளையத்தில் இருந்து கூத்தாநத்தம் கிராமத்திற்குட்பட்ட, ஊத்துப்பாளையம் வரை, 5 கி.மீ., தொலைவிற்கு சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து செல்ல
வேண்டிய சூழல் இருந்தது. குறிப்பாக, அலுவலக பணிக்கு செல்வோர், மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல்
அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து மக்கள் அளித்த புகார்படி, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மானுவங்காட்டு பாளையம் முதல் ஊத்துப்பாளையம் வரை, 5 கி.மீ., தொலைவிற்கு, 'பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா' திட்டத்தின்கீழ், ரூ.271.86 லட்சம் மதிப்பில், புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்து அரசுக்கு நன்றிதெரிவித்தனர்.