உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு


உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு


ராசிபுரம்:கட்சி கொடி கம்பங்களை அகற்ற, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகம் மூலம் கம்பங்களை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலை உள்பட பொது இடங்களில் உள்ள, கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நேற்று ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.
இதேபோல், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, ஊராட்சிகளிலும் கட்சி கொடியை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில்,'' நீதிமன்ற உத்தரவை அடுத்து நகராட்சி எல்லையில் உள்ள சாலையோரம், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது. கணக்கீடு செய்த பிறகுதான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவரும்,'' என்றார்.

Advertisement