புகார் பெட்டி

குப்பையால் சீர்கேடு



சவரிராயலு வீதி, காந்தி வீதி சந்திப்பில், குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ரகு, புதுச்சேரி.

துார்வாரிய மண்ணால் இடையூறு



லாஸ்பேட்டை அவ்வை நகர் வீதி வாய்க்காலில் இருந்து மண் எடுத்து சாலையில் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ரவி,லாஸ்பேட்டை.

வாகனங்களால் நெரிசல்



வீராம்பட்டினம் சாலையில், வாகனங்களை நிறுத்துவதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காந்தி, வீராம்பட்டினம்.

சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்



தவளக்குப்பம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி கிடக்கிறது.

மகேஷ், தவளக்குப்பம்.

Advertisement