டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் லயன்ஸ் அணி கோப்பை வென்றது

புதுச்சேரி : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி, டி.சி.எம். நிறுவனம் சார்பில் நடந்த டி20 இறுதி போட்டியில், லயன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பை வென்றது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில் டி20 போட்டிகள் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், ஷார்க்ஸ், லயன்ஸ், புல்ஸ், டைகர்ஸ், பாந்தர்ஸ், மற்றும் டஸ்கர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஐ.பி.எல். முறையில், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 1, 2 என்ற முறையில் நாக் அவுட் போட்டிகள் நடந்தது. இதில், லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இதையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு நடந்த இறுதி போட்டி யில் லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, ஆடிய டைகர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. டைகர்ஸ் அணியின் தாமரை கண்ணன் 34 பந்துகளில் 73 ரன்கள் அடித்தும் பலன் அளிக்காமல், லயன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி கவுரவ செயலாளர் ராமதாஸ் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
இதில், ஜெர்மன் நாட்டு தொழில் வல்லுனர்கள் ஜுவான், பென்சன், கார்ட்லினா மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிர்வாகிகள் கலத்து கொண்டனர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருது டஸ்கர்ஸ் அணியின் குஷ்வானத் திர்க்கும்,சிறந்த பௌலர் விருது டைகர்ஸ் அணியின் சாய் சரணுக்கும்,சிறந்த ஆல் ரவுண்டர் விருது அக்ஷ்தீப்பிர்க்கும் வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது டைகர்ஸ் அணியின் விஷ்ணுவிற்கு வழங்கப்பட்டது.