வன்னிய பெருமாள் கோவிலில் திருப்பணி

புதுச்சேரி : முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், பாஞ்சராத்ர ஆகம முறைப்படி, திருப்பணி துவங்க பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., சம்பத், தலைமை தாங்கி, திருப்பணிக்கான பந்தகால் நடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஹனுமன் சன்னதிக்கும், ஹயக்ரீவர் சன்னதிக்கும் திருப்பணி துவங்குவதற்கான பந்தல் போடும் பணி நடந்தது.
பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், திருப்பணி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement