மணல் கடத்திய வேன் பறிமுதல் 

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வீரப்பெருமாநல்லுார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக தோஸ்த் மினிவேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசை பார்த்ததும் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

வேனை பறிமுதல் செய்த புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement