சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு வேளாண்மை அதிகாரி 'அட்வைஸ்'

புதுச்சேரி : புதுச்சேரி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழைகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு;

புதுச்சேரி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நவரை நெற்பயிர், கரும்பு மற்றும் வாழைகளுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடிய விவசாயிகளின் பங்களிப்பை மாநில அரசே செலுத்துகிறது.

2025ம் ஆண்டு நவரை பருவத்திற்கு ஜன., 1ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை நெல் பயிர் செய்யும் விவசாயிகள் ஏப்., 15ம் தேதிக்குள்ளும், 2024ம் ஆண்டு நவ., 1ம் தேதியில் இருந்து 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கரும்பு மற்றும் வாழை நடவு செய்துள்ள விவசாயிகள் ஏப்., 30ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த பகுதியிலுள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விதைப்பு சான்றிதழ் பெற்று, பொது சேவை மையங்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும போது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைலில் வரும் ஓ.டி.பி., எண்ணை பொது சேவை மையங்களில் அளித்து தகவல் சரிப்பார்க்கலாம். பதிவு செய்வதற்கான கட்டணம் எதுவும் விவசாயிகள் சேவை மையத்தில் செலுத்த தேவையில்லை.

விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement