மின்மாற்றிகளில் 'காயில்' திருட்டு

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை மின்மாற்றிகளில் காப்பர் காயில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்வராயன்மலை, மணியார் பாளையம் கிராமத்தில் மின்வாரியம் சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டது.

கடந்த, 3ம் தேதி, அதில் உள்ள காப்பர் காயில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதனை அறிந்த மின் ஊழியர்கள் வெள்ளிமலை சரகத்திற்கு உட்பட்ட அனைத்து மின்மாற்றிகளிலும் சோதனை செய்தனர்.

அதில் நொச்சிமேடு கிராமத்தில் உள்ள மின்மாற்றி எண்: 3, ல் பொருத்தப்பட்டிருந்த காப்பர் காயில்கள் மற்றும் ஆயில் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

இது குறித்த புகாரில் கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement