அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கை விழா கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக இருந்து, தற்போது இப்பள்ளி, நகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடந்தது.

இதில் சேர்க்கை பெற்ற, 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் மாலை அணிவித்து கிரீடம் சூட்டி, இனிப்பு, நோட்டு, புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்.

அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கையை எடுக்க ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலர்கள் உலகநாதன், சுபத்ரா, பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement