852 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.73.51 கோடியில் வங்கிக்கடன்

சிவகங்கை : சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக நடத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் 852 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளைச் சார்ந்த 9 ஆயிரத்து 368 உறுப்பினர்களுக்கு ரூ.73 கோடியே 51 ஆயிரம் மதிப்பிப்பில் வங்கிக்கடன் இணைப்புக்கான ஆணை மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் 115 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் இலவச இயந்திரங்களை வழங்கினார்.

பின்னர் திருப்புத்துார் நகர் பகுதியில் மின் விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் வழங்கினார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ஆதித்யா, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தாட்கோ மாவட்ட மேலாளர் செலினா, உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னதுரை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement