பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி

15

புதுடில்லி: காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களை ராகுல் எப்போது கட்சியில் இருந்து நீக்குவார் என்று மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.



குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் பா.ஜ.,வுக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் களை எடுக்கப்பட வேண்டும் என்றார்.


இந் நிலையில், காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களை ராகுல் எப்போது கட்சியில் இருந்து நீக்குவார் என்று மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது;


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்த சமயத்தில் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது ஹிந்து மக்களை காயப்படுத்தும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன்.


ஆனால் உண்மை என்னவெனில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. மத ரீதியாக அவர்களை பிளவுப்படுத்தியது. காங்கிரசில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்று ராகுல் பேசியதை ஆதரிக்கிறேன். அவர்களை எப்போது நீங்கள் (ராகுல்) களையெடுக்க போகிறீர்கள்?


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement