மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட போலீஸ் சார்பில் கலெக்டர்அலுவலக ஆர்ச்சில் இருந்து மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான உரிமைகள், பாலின சமத்துவம், பெண் கல்வி உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தொடங்கி வைத்தார்.
கூடுதல் எஸ்.பி.,, பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., அமலஅட்வின், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இசக்கி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சிவா, எஸ்.ஐ.,க்கள் தினேஷ், ராஜவேல்., அழகுராணி, அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள், ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர்.
* பாண்டியன் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லுாரி அரங்கத்தில் கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க தலைவர் சதீஷ், செயலாளர் குணசீலன் தலைமை வகித்தனர். பயிற்சியாளர் சித்ரா, துணை பயிற்சியாளர் ரேவிக்னேஷ் கல்லுாரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கினர். கல்லுாரி முதல்வர் ராஜா, ஆசிரியர் ரவீந்திரன், நாட்டு நலப்பணி திட்ட பொறுப்பாளர் ராஜலக்ஷ்மி கலந்து கொண்டனர். மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
*மானாமதுரையில் சோனையா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் தெய்வேந்திரன், வக்கீல் அக்னிராஜ், மாருதி தொண்டு நிறுவன தலைவர் சோமநாதன் பங்கேற்றனர். மகளிர்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கினர்.
* திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை மருத்துவர் ஸ்ரீவித்யா தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் மகளிர் தின விழா பள்ளி முதல்வர் கவுரி சாலமன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பூமிநாதன் வரவேற்றார். தமிழாசிரியர் பாலமுருகன், ஆங்கில ஆசிரியர் மீனா அமுலரசு மகளிர் தின உரையாற்றினர். மாணவி மதிவதனி பெண்களின் சிறப்பு குறித்த கவிதை வாசித்தார். தமிழ் ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி மகளிர் தின பாடல் பாடினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் அபிநய சங்கரி நன்றி கூறினார்.
தேவகோட்டை: ஆறாவயல் பாரத் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து ஊர்வலம் நடத்தினர். எம்.எல்.ஏ. செந்தில்நாதன் துவக்கி வைத்தார். தாளாளர் செல்லத்துரை, முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை முன்னிலை வகித்தனர்.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், முதல்வர் அம்பிகா, துணை முதல்வர் ஸ்ரீகலா, காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் பாலமுருகன், அரிஸ்டோ லயன்ஸ் தலைவர் ராமராஜன், நடையாளர் சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.