வடக்கு ஒன்றிய தி.மு.க., தெருமுனை பிரசாரம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில், தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநில இலக்கிய அணி துணை செயலர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் சிவசங்கரன், ஒன்றிய துணை செயலர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி மதியழகன், ஒன்றிய பொருளாளர் சாமி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கோபிநாத், மேற்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க., சாதனைகள் குறித்து பேசினர்.
இதில், மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருஞானம், சுபாஷ், பாரதி, வீரபாண்டியன், வாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.