அலறவிடப்படும் கூம்பு வடிவு ஒலிபெருக்கிகள்; பொது தேர்வு நடப்பதால் தேவை நடவடிக்கை

1

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் துவங்கியிருப்பதால் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


மாணவ பருவத்தில் தேர்வுகள் முக்கியமானதாக இருந்தாலும் 10, 11, 12 வகுப்பு தேர்வுகள் முக்கியமானதாக உள்ளன. மாநில முழுவதும் 12, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பொதுத்தேர்வு நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொது தேர்வும் துவங்க உள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த நிலையில் மாசி திருவிழாக்கள் நத்தம், பழநி, கொடைரோடு, நிலக்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் துவங்கி உள்ளன. திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் சத்தம் காதுகளை கிழிக்கின்றன. மாணவர்கள் படிப்பும் பாதிப்பதால் பெற்றோர் பதறுகின்றனர்.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் .

.......

நடவடிக்கை எடுங்க



காற்று மாசுபடுவது உள்ளிட்ட பல கெடுதல்களை உருவாக்கக்கூடிய கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் . தற்போது மாணவர்களுக்கு தேர்வு காலம் துவங்கி விட்டதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதோடு மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.


தங்கபாண்டியன், தியாகி சுப்பிரமணிய சிவா நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர், மேலகோவில்பட்டி.

Advertisement