தமிழகத்தில் 29 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத துாக்குத்தண்டனை பின்னணி என்ன?

மதுரை: தமிழக சிறைகளில் துாக்குத்தண்டனைக்கு ஆளானவர்கள் மேல்முறையீடு செய்து 'சாகும் வரை தண்டனை' பெற்றதாலும், மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் 29 ஆண்டுகளாக துாக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
பெண்கள் தொடர்பான கொடுங்குற்றம் உள்ளிட்ட வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இருநாட்களுக்கு முன்புகூட கொலை வழக்கு ஒன்றில் ஒருவருக்கு நெல்லை நீதிமன்றம் துாக்குத் தண்டனை விதித்தது. கடந்தாண்டு கன்னியாகுமரி கிரீஷ்மாவுக்கு காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கேரளா நீதிமன்றம் துாக்குத்தண்டனை விதித்தது.
மதுரை சிறையில் கட்டவெள்ளை திவாகர் என்பவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். கோவை, திருச்சி, கடலுார், புழல் உட்பட 9 மத்திய சிறைகளில் 24 கைதிகள் மரண தண்டனைக்குள்ளானவர்கள். அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மரண தண்டனையை 'சாகும் வரை தண்டனை' யாக பெற்று சிறையில் உள்ளனர். இதனால் 29 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
சிறை அதிகாரிகள் கூறியதாவது: 1996ல் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ சங்கருக்கு துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 'சாகும் வரை தண்டனை' அனுபவிக்கும் கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்வது போன்ற எந்த சலுகையும் கிடைக்காது.
பெண்களை வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதான நாகர்கோவில் காசி, 1996ல் நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து ரவுடி லிங்கத்தை கொலை செய்த வழக்கில் ராதாகிருஷ்ணன், துாக்கு செல்வம், கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ், சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததோடு, அவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்து தன் தாயை கொலை செய்த அஸ்வந்த் உள்ளிட்டோர் சாகும் வரை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
டில்லி உட்பட வடமாநிலங்களில் இன்றும் துாக்குத்தண்டனை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது. தமிழகத்தில் அந்த நடைமுறை மறைந்து 29 ஆண்டுகளாகிவிட்டது. துாக்குத்தண்டனையில் இருந்து தப்பிக்க மேல்முறையீடு, ஜனாதிபதிக்கு கருணை மனு என பல வழிகள் உள்ளதாலும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் துாக்குத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்காததாலும் அரசும் அத்தண்டனையை ஊக்குவிப்பதில்லை. இவ்வாறு கூறினர்.



மேலும்
-
காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
இந்திய அணி சிறப்பான தொடக்கம்; ரோகித் ஷர்மா அதிரடி
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்