இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

3

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து








ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மிக உயிரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள்.




பிரதமர் மோடி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் முழுதும் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


இந்த வெற்றி வரலாற்றை உருவாக்கி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். நமது அனல் பறக்கும் ஆற்றலும், ஆடுகளத்தில் நமது அசைக்க முடியாத ஆதிக்கமும் தேசத்தை பெருமைப்படுத்தியது. இந்த வெற்றி புதிய அளவுகோலை அமைத்துள்ளது.


லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்


மகத்தான வெற்றி. இந்திய அணி வீரர்கள், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றனர். இந்திய அணியின் சிறப்பான ஆட்டம், செயல்திறன் மற்றும் களத்தில் ஆதிக்கம் ஆகியவை ஊக்கமளிப்பதாக இருந்தது. சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்.




உ.பி., முதல்வர் யோகி


வரலாற்று வெற்றி. சாம்பியன்களுக்கு வணக்கங்கள். நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய அணியின் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நாடு பெருமை கொள்கிறது.


முதல்வர் ஸ்டாலின்

சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள். சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,

துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும்.





முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர்முழுதும் தோல்வி அடையாத இந்திய அணி கோப்பை வெல்வதற்கு தகுதியானது.


சச்சின் டெண்டுல்கர்


சாம்பியன்ஸ் டிராபி வென்ற சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்




கொண்டாட்டம்


இந்தியாவின் வெற்றியை நாடு முழுதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement