100 பவுன் கொள்ளை நடந்தவீட்டில் டி.ஐ.ஜி., விசாரணை

100 பவுன் கொள்ளை நடந்தவீட்டில் டி.ஐ.ஜி., விசாரணை


அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, 100 பவுன் கொள்ளை நடந்த ஆசிரியை வீட்டில், சேலம் டி.ஐ.ஜி., உமா ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே, நேற்று முன்தினம் ஆசிரியை ஷேர்லின்பெல்மா, 44, என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, தர்மபுரி, டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், 3 தனிப்படை கள் அமைத்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நேற்று மாலை சேலம் டி.ஐ.ஜி., உமா, கொள்ளை நடந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியம், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா உடனிருந்தனர்.


Advertisement