காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ம் ஆண்டு, கணினி முன் பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையத்துடன் புதிய ரயில் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கும் 'பாசஞ்சர்' ரயிலும், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கு வாராந்திர 'எக்ஸ்பிரஸ்' ரயில்களும் இயக்கப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில், பெயர் பலகை இல்லாததால், வெளியூரில் இருந்து வரும் பயணியர், ரயில் நிலையத்தை தேடி அலைய வேண்டிய நிலை இருந்தது. இதனால்,நுழைவாயில் பகுதியில், பெயர் பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம்சார்பில், ரயில் நிலைய வளாகத்தில், நுழைவாயில் வளைவுஅமைக்கப்பட்டு, அதில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்,காஞ்சிபுரம் ரயில் நிலையம்' என, எழுதப்பட்டு உள்ளது.
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்