பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்
பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்
அரவக்குறிச்சிஅரவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் வழியில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து அரவக்குறிச்சிக்கு தினந்தோறும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் பலர் வந்து செல்கின்றனர். காலை, 8:00 மணிக்கு முன் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.
தனியார் பஸ், அரவக்குறிச்சியில் உள்ள புங்கம்பாடி வளைவு பகுதியிலேயே இறக்கிவிட்டு செல்கிறது. இங்கிருந்து பள்ளிக்கு செல்ல, ஒரு கிலோ மீட்டருக்கு மேல் தொலைவு உள்ளதால் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, அரவக்குறிச்சி பஸ் ஸ்டாப் வரை பஸ்கள் சென்று வந்தால், பள்ளிக்கு அருகிலேயே மாணவ, மாணவியரை இறக்கி விட்டு செல்லலாம். எனவே, பாளையத்திலிருந்து காலை, மாலை வேளையில் இயக்கப்படும் பஸ்களை, பஸ் ஸ்டாப் வரை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
இந்திய வம்சாவளி மாணவி மாயம்; டொமினிகன் குடியரசில் தேடுதல் தீவிரம்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்