ராயனுாரில் அரசு வங்கிதொடங்க மக்கள் கோரிக்கை
ராயனுாரில் அரசு வங்கிதொடங்க மக்கள் கோரிக்கை
கரூர்கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக ராயனுார் உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. மேலும், கரூரில் இருந்து திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனுார் வழியாகவே சென்று வருகின்றன.
ராயனுார் அருகே, புதிய ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு சில ஏ.டி.எம்.,களே உள்ளன. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தான்தோன்றிமலை, கரூர், காந்திகிராமம்
போன்ற பகுதிகளுக்குதான் சென்று வருகின்றனர். எனவே, கரூர் மாநகர பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வரும் ராயனுாரில் அரசு வங்கியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆரோவில்லில் 'ஷோ ஜம்பிங்' குதிரையேற்ற போட்டி
-
கை விரல் ரேகை பதிவில் தொடர் சிக்கல் ரேஷன் பொருள் வினியோகம் தாமதம்
-
'அப்டேட்' ஆகாத 'கியூட்' தேர்வு வெப்சைட்; மாணவர்கள் குழப்பம்
-
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
-
குல்பூஷண் ஜாதவ் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை
-
தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி செந்துாரில் சுவாமி வீதி உலா