கை விரல் ரேகை பதிவில் தொடர் சிக்கல் ரேஷன் பொருள் வினியோகம் தாமதம்

திருப்பூர்: ''விரல் ரேகை பதிவு நடைமுறையை மேற்கொள்வதில் சிக்கலால், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தாமதம் நிலவுகிறது'' என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் போது, அவர்களது கைவிரல் ரேகை அல்லது கருவிழி ரேகை பதிவு செய்யப்படுகிறது.

இதில் தற்போது பெருமளவு தாமதம் ஏற்படுகிறது என கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

ஆதார் பதிவு அடிப்படையிலான தரவுகளுடன் சரி பார்த்து பி.ஓ.எஸ்.,(பாய்ன்ட் ஆப் சேல்) கருவி மூலம், விரல் ரேகை பதிவுகள் ஏற்கப்படுகின்றன.

உரிய திறன் கொண்ட இணைய தள வசதியில்லாமல், மொபைல் போன் 'ஹாட் ஸ்பாட்' பயன் படுத்துகிறோம். நெட்ெவார்க் கிடைக்காமல் ரேகை பதிவு தாமதமாகிறது.கடைக்கு பொருள் வாங்க வரும் பெரும்பாலான முதியோர்கள் கைவிரல் ரேகைகள் பதிவு செய்வதிலும் பெரும் சிரமம் நிலவுகிறது.

இது வரை விரல் ரேகைகள் 70 சதவீதம் வரை கிடைத்தால் கூட, பி.ஓ.எஸ்., கருவி ஏற்றுக் கொண்டு விடும். பொருட்களுக்கு பில் போட்டு விடுவோம். தற்போது இந்த சாப்ட்வேர் அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் விரல் ரேகை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பில் போட முடியும் என்ற நிலை நிலவுகிறது.

கருவியில் விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறை குறித்து தற்போது எங்களுக்கு விளக்கும் வகையில் பட விளக்கத்துடன் விவரங்களும் அளித்துள்ளனர்.

கார்டுதாரர்களுக்கு இதைப் புரிய வைத்து, ரேகை பதிந்து பொருள் வழங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

தாமதம் ஏற்படு வதால், பலரும் எங் களுடன் வாக்குவா தம் செய்கின்றனர். நவீன முறைகளைச் செயல்படுத்துவதில் தவறில்லை.

அதற்கேற்ற கருவிகளும், நடைமுறைகளும் எளிதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement