ஆரோவில்லில் 'ஷோ ஜம்பிங்' குதிரையேற்ற போட்டி

வானுார் : புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் 'ரெட் எர்த்' குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில், 25ம் ஆண்டு தேசிய குதிரையேற்ற போட்டிகள் கடந்த 7ம் தேதி துவங்கியது.
சென்னை, பெங்களூரு, மும்பை, ஊட்டி உட்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 குதிரைகள், 150 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரு நாட்களாக நடை பயிற்சி, அலங்கார நடை, டிரஸ்சேஜ் எனப்படும் குதிரை மற்றும் அதன் வீரர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மூன்றாவது நாளான நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை தடை தாண்டுதல் போட்டி நடந்தது.
மாலை 4:00 மணிக்கு ஜூனியர்களுக்கான 105 செ.மீ., ேஷா ஜம்பிங், 95 செ.மீ., ேஷா ஜம்பிங் போட்டிகளும், சீனியர்களுக்கான 120 செ.மீ., ேஷா ஜம்பிங் போட்டி நடந்தது. இப்போட்டியை, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் குதிரையேற்ற போட்டிகள் நடக்கிறது. 16ம் தேதி இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பரிசு வழங்க உள்ளார்.
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்