கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்
கரூர்தமிழகத்தில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக சராசரியாக, 98 டிகிரி பாரன்ஹீட் முதல், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்து
வருகிறது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், இளநீர், தர்ப்பூசணி, மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். மேலும், கோடைகாலத்தில் பானையில் வைக்கப்பட்ட நீரை பொது மக்கள் விரும்பி அருந்துவது வழக்கம்
இதையொட்டி, பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய பானை விற்பனை, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூடு
பிடித்துள்ளது.இதுகுறித்து, மண்பானை விற்பனையாளர்கள் கூறியதாவது: நடப்பாண்டு கோடையில், களிமண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. சாதாரண பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையிலும், பிளாஸ்டிக் பைப் பொருத்தப்பட்ட மண் பானை, 300 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
மேலும்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி