தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்திருவிளக்கு, கன்னியா பூஜை
ஓசூர்ஓசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம், தாம்ப்ராஸ் ஓசூர் கிளை சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய், நொடியின்றி மக்கள் வாழவும், சுவாசினி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு மற்றும் சுவாசினி பூஜையில் பங்கேற்றனர். பத்திரகாசி ஆஸ்ரம சங்கர சாக்தானந்த சரஸ்வதி குகை சுவாமிகள் தலைமை வகித்து, பூஜையை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 11 பெண் குழந்தைகளுக்கு மாலைகள் அணிவித்து, கன்னியா பூஜை செய்யப்பட்டது. பத்திரகாசி ஆஸ்ரம சங்கர சாக்தானந்த சரஸ்வதி குகை சுவாமிகள், பெண் குழந்தைகளுக்கு அருளாசி வழங்கினார். தமிழ்நாடு பிராமணர் சங்க, ஓசூர் கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கிருஷ்ணசாமி, மகளிர் அணி செயலாளர் ரோகினி, இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன், அமைப்பு செயலாளர் கணேஷ், இணை செயலாளர்கள் ராமன், குமார், ஆலோசகர்கள் சத்திய வாகீஸ்வரன், நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
-
காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு