மாநில வாலிபால் போட்டியில்ஓசூர் பெண்கள் அணி முதலிடம்



மாநில வாலிபால் போட்டியில்ஓசூர் பெண்கள் அணி முதலிடம்


ஓசூர்தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏஞ்சல்ஸ் வாலிபால் கிளப் ஆகியவை சார்பில், மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன.
இதில், சேலம், தர்மபுரி, திருப்பத்துார், ஆத்துார், ஓசூர் பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்று, சுழற்சி முறையில் மோதின. இறுதி போட்டியில், ஓசூர் தங்கவேலு வாலிபால் அகாடமி அணியும், சேலம் ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரீஸ் அணியும் மோதின. இதில், 25 - 20, 25 - 23 என்ற நேர்செட் கணக்கில், ஓசூர் பெண்கள் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணியை, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் பாராட்டி வாழ்த்தினார்.

Advertisement