பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு


பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு


ஓசூர்ஓசூர் அருகே, தொரப்பள்ளி பஞ்., உட்பட்ட குமுதேப்பள்ளி கிராமத்தில், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினர். துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் பஞ்., தலைவர்கள் ராமு, ரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement