பணம், நகை பறிப்பு


பணம், நகை பறிப்பு


பெயின்டர் கைது பெத்தநாயக்கன்பாளையம்:புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பவுனம்மாள், 70. கடந்த ஜன., 21ல், அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மஞ்சப்பையில், 10,000 ரூபாய், கால் பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த வழியே பைக்கில் வந்த ஒருவர், பவுனம்மாள் மஞ்சப்பையை பறித்துச்சென்றார். அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில் மின்னாம்பள்ளியை சேர்ந்த பெயின்டர் அய்யனார், 29, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், 10,000 ரூபாய், நகையை மீட்டு, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement